காபா டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ராகுல்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Trending
அதன்பின் தொடர் மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பது. இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறியது. இதனையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை கேஎல் ராகுல் 33 ரன்களுடனும், ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 10 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ராகுலுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மறுமுனையில் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 8 பவுண்டரிகளுடன் 84 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்துள்ள ஜடேஜா - நிதீஷ் ரெட்டி இணை விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றனர். இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க மேற்கொண்டு 79 ரன்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now