
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான இரு நாட்டு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் இங்கிலாந்து சென்றுள்ளனர். அதேசமயம் இந்த தொடருக்கான இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி லெவனில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக கேஎல் ராகுலை அவர் தேர்ந்தெடுத்துள்ளார், மேலும் மிடில் ஆர்டரில், கேப்டன் ஷுப்மான் கில்லுடன் சேர்ந்த அறிமுக வீரர் சாய் சுதர்ஷனுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.