இப்படி செய்தால் ஆஸி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்ஹிரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்த, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
Trending
டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் மூன்றாவது நாளில் ஒரு மணி நேரத்தில் 9 கேட்ச்களை இழந்து அந்த அணி படுதோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, “ஆஸ்திரேலிய அணி ஸ்விப் சாட்களையே தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். நீங்கள் இவ்வளவு ஸ்விப் சாட்டுகளை ஆடினால் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி விடும். ஆஸ்திரேலியாவின் நிலைமை மோசத்திலிருந்து படுமோசமாகி விட்டதாக நான் கருதுகிறேன்.
டெல்லி டெஸ்டில் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை கவுண்டர் அட்டாக் செய்து ரன்களை சேர்த்தது. அப்போது கங்காருக்கள் குதிப்பது போல் ரன்கள் வேகமாக வரும் என நான் நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சீட்டு கட்டுகள் ஒன்றின் பின் ஒன்று சரிவது போல் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் விழுந்தது.
ஆஸ்திரேலியா விளையாடிய விதத்தை பார்த்த போது நான் போட்டி நான்காவது நாள் வரை செல்லும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஞாயிற்றுக்கிழமையே போட்டி முடிந்து விட்டது. ஆஸ்திரேலிய அணியிடம் நான் கேட்க விரும்புவது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அப்படி என்ன உங்களுக்கு அவசரம்? எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமா? ஆஸ்திரேலிய அணி டெல்லி டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் 31 ஓவர் தான் விளையாடினார்கள்.
நாக்பூரிலும் என் நினைவு சரியாக இருந்தால் அவர்கள் 32 ஓவர் விளையாடினார்கள். ஒரு ஐம்பது ஓவர் கூட உங்களால் விளையாட முடியாதா? இது என்ன 30 ஓவர் போட்டியா? 50 ஓவர் தொடர் அடுத்த மாதம் தான் நடைபெறுகிறது. குறைந்தபட்சம் 100 அல்லது 125 ஓவர்கள் விளையாட முயற்சி செய்யுங்கள். ஆனால் அது நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now