
இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் வரும் மார்ச் 17ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ரன் குவிப்புக்கு சாதகமான மைதானமாக விளங்கப்படும் மும்பை வான்கடேவில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள மேக்ஸ்வெல் களம் காண்கிறார்.
இதேபோன்று மிச்சல் மார்ஸ் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலிய ஒரு நாள் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவுக்கு வந்து ஒருநாள் தொடரில் விளையாடும் அணிகள் படுதோல்வியை சந்திக்கும். ஒரு தலைப்பட்சமாக முடிவு அமைவதால் போட்டியில் எந்த விறுவிறுப்பும் இருக்காது.ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணி பலமாக இருக்கிறது.