அணியின் பேட்டிங் ஆழம் எனக்கு சுதந்திரம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!
அதிரடியாக விளையாடும் அணுகுமுறை எனக்கு இயல்பானதல்ல என்றாலும் எங்கள் அணியின் பேட்டிங் ஆழம் எனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்காளைச் சேர்க்க தவறினர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இப்போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். எங்கள் வழியில் வெற்றி பெறுவது ஒரு சிறந்த உணர்வு. ஆக்ரோஷமாக விளையாடுவது எனக்கு இயல்பானதல்ல, ஆனால் நான் உண்மையில் செய்ய விரும்பிய ஒன்று. நீங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்யும்போது, உங்களுக்கு அணி மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இருக்க வேண்டும்.
நான் முன்பு ராகுல் டிராவிட்டிடமும், இப்போது கௌதம் கம்பீருடனும் பேசினேன். இது நான் உண்மையில் செய்ய விரும்பிய ஒன்று. நான் இத்தனை வருடங்களாக வித்தியாசமான பாணியில் விளையாடியுள்ளேன், இப்போது இதன் மூலம் பலன்களைப் பெறுகிறோம். நாம் மேற்பரப்புகளின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும், முதல் ஐந்து-ஆறு ஓவர்களை எப்படிச் செயல்படுத்த விரும்பினேன் என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தது.
Also Read: Funding To Save Test Cricket
நானும் முன்பே அவுட் ஆகிவிட்டேன், ஆனால் செயல்படுத்தல் முக்கியமானது. ஆனால் அணியில் பேட்டிங்கின் ஆழம் அதிகம் என்பதால் எங்களால் சுதந்திரமாக விளையாட அது உதவுகிறது. ஏனெனில் ஜடேஜா போன்ற வீரர் உங்களின் எட்டாம் வரிசையில் களமிறங்கும் போது, முன்னாள் உள்ள வீரர்களுக்கு அது நம்பிக்கை தருகிறது. இங்கேவந்து எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now