
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது எதிர்வரும் ஜூன் 13அம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா மற்று விராட் கோலி உள்ளிட்டோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து அணியின் கேப்டனுக்காக தேடல் இருந்தது. இந்நிலையில் தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்தூல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் வய்ப்பு கிடைத்துள்ளது.
அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், முகமது ஷமி, அக்ஸர் படேல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக உள்ளூர் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.