Advertisement

இந்தியாவில் ஆஸ்திரேலியாதான் எங்களை விட முன்னிலை பெற்று இருந்தார்கள் - கேஎல் ராகுல்!

நாம் ஒரு சிறந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஆஸ்திரேலியாதான் எங்களை விட முன்னிலை பெற்று இருந்தார்கள் என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். 

Advertisement
இந்தியாவில் ஆஸ்திரேலியாதான் எங்களை விட முன்னிலை பெற்று இருந்தார்கள் - கேஎல் ராகுல்!
இந்தியாவில் ஆஸ்திரேலியாதான் எங்களை விட முன்னிலை பெற்று இருந்தார்கள் - கேஎல் ராகுல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 28, 2023 • 01:49 PM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்திய அணி இந்தத் தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றி இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை பொருத்தவரை எடுத்துக் கொண்டால் சமீப காலத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வந்தது என்று கூறலாம்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 28, 2023 • 01:49 PM

கடந்த முறை இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் இந்த முறை இந்திய அணி அதற்கு திருப்பி பதில் அடி கொடுத்து இருக்கிறது. கேஎல் ராகுல் தலைமையில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அங்கேயே இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெல்லக்கூடிய இடத்தில் இருந்து தோல்வி அடைந்தது. இது ரசிகர்களிடையே கொஞ்சம் கவலையை உண்டாக்கி இருக்கிறது என்று கூறலாம்.

Trending

இதுகுறித்து பேசிய கேஎல் ராகுல், “கடந்த சில வாரங்களில் நாங்கள் அனைவரும் ஒரே மன நிலையில் இருந்து வருகிறோம். ஆசியக் கோப்பை எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அங்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியும் வெற்றி பெற்று ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. அது மிகவும் போட்டி அளிக்கக்கூடிய ஒரு தொடர்.நாம் ஒரு சிறந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஆஸ்திரேலியாதான் எங்களை விட முன்னிலை பெற்று இருந்தார்கள்.

நாங்கள் முடிந்தவரை எங்களுக்கு தரப்பட்ட ரோலை செய்ய முயற்சி செய்கிறோம். மேலும் எங்களை அழுத்தத்திற்குள் கொண்டு செல்கிறோம். பயிற்சியாளர்களுடன் நிறைய பேசுகிறோம். எங்களுக்கு குறிப்பிட்ட மிகத் தெளிவான ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நாங்கள் முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். எங்களால் முடிந்தவரை நாங்கள் அதைச் செயல்படுத்தி இருக்கிறோம். இது எங்களுக்கு நம்பிக்கையை தருகிறது. மேலும் நாங்கள் இதை கட்டி எழுப்ப முடியும். மேலும் சிறப்பாக செயல்பட முடியும்” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement