
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் டிராபி நாளை மறுநாள் நாக்பூர் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இந்திய அணி நீடித்திருக்க இந்த தொடரில் மூன்று போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தங்களது உள்நாட்டில் கடைசி இரண்டு பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி இழந்துள்ளதால் இந்தத் தொடரை எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடரை யார் வெல்வார்கள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி தனது கணிப்பை கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா அணி 2-1 என இந்தத் தொடரை கைப்பற்றும் என்று நினைக்கிறேன். மேலும் உஸ்மான் கவஜா தொடர் நாயகன் விருது பெறுவார் என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாக நான் உணர்கிறேன். அவர்கள் சமீப காலத்தில் எதிரணிகளை வீழ்த்தும் அணியாக இருந்திருக்கிறார்கள். இது நிலைமைகளைப் பொறுத்து மாறுபடலாம். மூன்று நான்கு நாட்களுக்கு மேல் தொடரும் ஆட்டம் என்றால் ஆஸ்திரேலியா அணியே வெல்லும்.