
இந்தியாவில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய அனைத்தும் முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் நெதர்லாந்து அணியை தவிர, மற்ற ஒன்பது அணிகள், உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தன.
நடப்பு உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் ஆசிய அணிகளான, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் என 5 அணிகள் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்றன. இதேபோல தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியா அணி அவர்களை ஒருநாள் கிரிக்கெட்டில் சந்தித்தது. இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அவர்களது மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் எதிர்த்து விளையாடியது.
இதற்கு அடுத்து இந்த அணிகளில் சில அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத இருக்கின்றன. குறிப்பாக இந்தியா உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஐசிஐசிஐ ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறது.