IND vs AUS: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 64.06 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் வலுவாக உள்ளது. அடுத்த போட்டியில் ஜெயித்தால் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தான் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல் தான் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார்.
Trending
ஆனால் அவர் 2 போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு, நல்ல ஃபார்மில் உள்ள ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்கவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. ஆனால் துணை கேப்டனாக இருக்கும் கேஎல் ராகுலை பென்ச்சில் உட்காரவைக்க முடியாது. அந்தவகையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் அவருக்கு இடம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், அவர் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக 2ஆவது டெஸ்ட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெய்தேவ் உனாத்கத் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ஷுப்மன் கில், புஜாரா, கோலி, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கத்.
Win Big, Make Your Cricket Tales Now