
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தோடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதில் 2011 போல சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் இந்தியாவில் வெல்வதற்கு பேட்டிங் துறையின் இரு துருவங்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள்.
அந்த வரிசையில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் விளாசிய விராட் கோலி அதிவேகமாக 13,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் உலக சாதனையை படைத்து வெற்றியில் பங்காற்றி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்து வருகிறார். அதே போல சமீப காலங்களில் தடுமாறிய ரோஹித் சர்மாவும் நிறைய விமர்சனங்களை சந்தித்து வந்தார்.
இருப்பினும் இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற உலக சாதனையை படைத்த இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி வருகிறார். ஆனாலும் அழுத்தமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் கைவிடுவதால் காலம் கடந்த இந்த சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் காணப்படுகின்றன.