ராகுல் டிராவிட்டின் கேட்ச் சாதனையை முறையடித்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் கேஎல் ராகுல் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.

Manchester Test: இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் கேட்சுகளை பிடித்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை கேஎல் ராகுல் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஒல்லி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டை கைப்பறியுள்ளனர். இதையடுத்து 133 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் இங்கிலாந்தின் ஸாக் கிரௌலி கேட்சைப் பிடித்ததன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிக கேட்சுகளை பிடித்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக ராகுல் டிராவிட் இங்கிலாந்தில் 19 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது கேஎல் ராகுல் 20 கேட்சுகளைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் கேட்சுகளைப் பிடித்த இந்திய வீரர்கள்
- 20* - கே.எல். ராகுல்
- 19 - ராகுல் டிராவிட்
- 15 - விராட் கோலி
- 14 - சுனில் கவாஸ்கர்
- 12 - சச்சின் டெண்டுல்கர்
- 11 - அஜித் வடேகர்
- 10 - வி.வி.எஸ். லக்ஷ்மன்
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
Also Read: LIVE Cricket Score
இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now