
Yashasvi Jaiswal Fastest 50 Sixes In Test Record: இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அந்தவகையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 போட்டிகளில் 36 இன்னிங்ஸ்களில் விளையாடி 39 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேலும் 11 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் சாதனையைப் படைப்பார். தற்போது இந்த சாதனையை பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் பெயரில் உள்ளது.