Advertisement

ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 05, 2025 • 02:34 PM

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது எதிர்வரும் ஜூன் 13அம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 05, 2025 • 02:34 PM

இத்தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா மற்று விராட் கோலி உள்ளிட்டோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து அணியின் கேப்டனுக்காக தேடல் இருந்தது. இந்நிலையில் தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்தூல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் வய்ப்பு கிடைத்துள்ளது.

அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், முகமது ஷமி, அக்ஸர் படேல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக உள்ளூர் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. 

இந்நிலியில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தாலைமையிலான இந்த அணியில் காயம் காரணமாக கஸ் அட்கின்சன் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தெல் மற்றும் பிரைடன் கார்ஸ் உள்ளிட்டோர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். 

இங்கிலந்து அணி (முதல் டெஸ்ட்): பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement