IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை இழந்துள்ள நிலையில் ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்சமயம் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜேமி ஸ்மித் காயம் காரணமாக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ஜேமி ஸ்மித் மூன்றாவது டி20 போட்டியின் போது காயத்தை சந்தித்ததன் காரணமாக கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக ஜேக்கப் பெத்தெலும்க்கு லெவனில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் ஸ்மித் தனது உடற்தகுதியை எட்டாத காரணத்தால் இந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் இடம்பிடித்திருந்த ரெஹான் அஹ்மத் தற்போதும் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோ ரூட் இணைந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் வுட்.
Win Big, Make Your Cricket Tales Now