PAK vs ENG, 3rd Test: புதிய யுக்தியுடன் களமிறங்கும் இங்கிலாந்து; பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியானது 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
முன்னதாக இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரையும் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதேசமயம் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஹன் அஹ்மத், ஜேக் லீச் மற்றும் ஷோயப் பசீர் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு கஸ் அட்கின்சன் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
அதேசமயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விலையாடியா பிரைடன் கார்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் ஆகியோர் பிளேயிங் லெவனில் தங்களது இடங்களை இழந்துள்ளனர். இதுதவிர்த்து பென் டக்கெட், ஸாக் கிரௌலி, ஹாரி புரூக், ஜோ ரூட், ஒல்லி போப் ஆகியோரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். இதில் ஜோ ரூ மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பந்துவீச்சிலும் அணிக்கு பாங்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது, ஜாக் லீச், சோயிப் பஷீர்.
Win Big, Make Your Cricket Tales Now