பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் நேரங்களில் கில் கேப்டனாக செயல்படலாம் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் போது அவருக்கு பதிலாக ஷுப்மான் கில் டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.
முன்னதாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நிய்மிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. ஆனால் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக பும்ராவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்பட்டது. மேலும் தற்போது வரை வெளியான தகவலின் அடிப்படையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்ற விவாதத்திற்கு மத்தியில், முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர், பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் போது அவருக்கு பதிலாக ஷுப்மான் கில் டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் கூறிவுள்ளது தற்சமயம் பேசுபொருளாக மாறிவுள்ளது.
I think Bumrah is an automatic captaincy choice, unless he doesn't want the responsibility. He should be the captain with Gill as VC - stepping in whenever Bumrah needs rest. This way Gill could also be groomed without the pressure of being the full time captain. #ENGvIND
— Wasim Jaffer (@WasimJaffer14) May 16, 2025இதுகுறித்து பேசிய வாசிம் ஜாஃபர் தனது பதிவில், “என்னைப் பொறுத்த வரையில் அணியின் அடுத்த கேப்டன் தேர்வாக பும்ரா இருப்பார். ஒருவேளை அவர் அந்த பதவியை விரும்பவில்லை என்றால் தவிர. கில் துணைத் தலைவராக இருக்கும்போது அவர் கேப்டனாக இருக்க வேண்டும் - பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் போது கில் கேப்டன் பொறுப்பை ஏற்காலாம். இந்த வழியில் முழுநேர கேப்டனாக இருப்பதன் அழுத்தம் இல்லாமல் கில்லையும் தயார்படுத்த முடியும்” என்று கூறிவுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கான தேர்வில் ஜஸ்பிரித் பும்ரா, ஷுப்மன் கில், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பும்ரா மூன்று முறை இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திவுள்ளார். ஆனால் கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது அவர் காயத்தை சந்திததன் காரணமாக, தற்போது அவரின் உடற்தகுதி குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now