
இந்திய அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த் நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
Confirmed: Shubman Gill Appointed India’s New Captain, Shreyas Iyer Named Vice-Captain! pic.twitter.com/5CGwrivyRH
— CRICKETNMORE (@cricketnmore) October 4, 2025
மேற்கொண்டு தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.