ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை சமீபத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தான் தேர்வுசெய்த அணியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள், இரண்டு இந்திய வீரர்கள், பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீரர் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள நிலையில், இந்த அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமித்துள்ளார். அதன்படி ஹர்ஷா போக்லே தனது அணியின் தொடக்க வீரர்களக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலந்தின் பென் டக்கெட்டை ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.
Trending
இதில் ஜெய்ஸ்வல் நடப்பு ஆண்டில் 27 இன்னிங்ஸ்களில் 1,332 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் சராசரி 52 ஆக உள்ளது. அதே நேரத்தில், டக்கெட் நடப்பு ஆண்டில் 1,100 ரன்களை எடுத்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரை மூன்று, நான்காவது இடத்தில் தேர்வு செய்துள்ளர். இதில் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு டெஸ்டில் 1,013 ரன்களையும், ஜோ ரூட் 1,556 ரன்களையும் குவித்து ரன் குவித்ததில் முதலிடத்தில் உள்ளார்.
அவர்கள் தவிர்த்து இங்கிலாந்தின் ஹாரி புரூக், இலங்கை ஆணியின் கமிந்து மெண்டிஸுக்கு பேக்லே தனது அணியில் இடம் கொடுத்துள்ளார். மேலும் அணியின் விக்கெட் கீப்பராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானையும், சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவையும் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.
இதில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவியை வழங்கியுள்ளார். அதேசமயம் ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள இந்த அணியில் இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஹர்ஷா போக்லே தேர்வு செய்த 2024ஆம் ஆண்டின் டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், முகமது ரிஸ்வான், ரவீந்திர ஜடேஜா, கஸ் அட்கின்சன், ககிசோ ரபாடா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்).
Win Big, Make Your Cricket Tales Now