Advertisement

பிட்ச் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை - டேனியல் வெட்டோரி!

இந்தியாவிலுள்ள ஆடுகளங்கள் குறித்த விவாதங்காள் சூடுபிடித்துள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். 

Advertisement
 'I don’t mind the surfaces' - Daniel Vettori on the turning tracks in India
'I don’t mind the surfaces' - Daniel Vettori on the turning tracks in India (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 06, 2023 • 10:26 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது. தனால் தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 06, 2023 • 10:26 PM

முன்னதாக இத்தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே இந்தியா வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்துள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நாக்பூர், டெல்லியை விட 4.8 டிகிரி அளவுக்கு முதல் நாளிலேயே சுழன்ற இந்தூர் பிட்ச் மிகப்பெரிய சவாலாக அமைந்து இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

Trending

இதன் காரணமாக ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்திற்கு மோசம் என்று ரேட்டிங் வழங்கி 3 கருப்பு புள்ளிகளை ஐசிசி தண்டனையாக வழங்கியது. அத்துடன் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் பொதுவாக முதல் 3 நாட்கள் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதே இந்திய மைதானங்களின் இலக்கணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் 3 நாட்கள் தாண்டாத அளவுக்கு இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் துணிவு இல்லாதவர்கள் தான் பிட்ச்களை பற்றி விமர்சிப்பார்கள் என்று இந்திய மைதானங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் நியூசிலாந்து வீரர் மற்றும் ஆஸ்திரேலிய துணை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “பிட்ச் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் அது இருவருக்கும் பொதுவானது என்று நான் கருதுகிறேன். அதே போல் இது போன்ற மைதானங்களில் டாஸ் வெல்வது முக்கியம் என்றும் நான் நினைக்கவில்லை. இருப்பினும் இங்கே என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். அது ஆரம்பத்திலேயே சுழலும் என்பதால் நீங்கள் அதற்கேற்றார் போல் தயாராகி வர வேண்டும். மேலும் அது நீங்கள் உங்களுடைய நுணுக்கத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் அனுமதியையும் கொடுக்கிறது.

அத்துடன் அந்த சூழ்நிலைக்கேற்ப பேட்ஸ்மேன்களும் தயாராக இருக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலைகள் நீங்கள் விடாமுயற்சியுடன் துணிச்சலான செயல்பாடுகளை வெளிப்படுத்த அனுமதிக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் 30 ரன்கள் எடுப்பது கூட பெரிதாக அமையலாம். ஆனால் அந்த 30 ரன்களை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ள போகிறீர்கள் என்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எல்லாவற்றையும் விட அதை ஏற்றுக் கொள்வது தான் சவாலாகும். இதை சொல்வதை விட செய்வது எளிதானது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement