Advertisement

ஒருநாள் தரவரிசை: பாபர் ஆசாமை நெருங்கும் ஷுப்மன் கில்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

Advertisement
ஒருநாள் தரவரிசை: பாபர் ஆசாமை நெருங்கும் ஷுப்மன் கில்!
ஒருநாள் தரவரிசை: பாபர் ஆசாமை நெருங்கும் ஷுப்மன் கில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 04, 2023 • 08:55 PM

ஐசிசியின் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க இருக்கும் நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையை வெளியிட்டு இருக்கிறது. சிறிது காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் தரவரிசையில் இருந்து வரும் பாபர் அசாமை, இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் மிகவும் நெருங்கி இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் இருவரும் செயல்படுவதை பொறுத்து இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 04, 2023 • 08:55 PM

ஷுப்ப்மன் கில் உலகக் கோப்பையில் பாபர் அசாமை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தை கைப்பற்றினால், 2017 ஆம் ஆண்டு முதல் 1,258 நாட்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் இருந்து வந்த சாதனையை, பாபர் அசாமால் உடைக்க முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியாளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணியின் ஷுப்மன் கில் 839 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், தென் ஆப்பிரிக்க அணியின் ரஸ்ஸி வேண்டர் டூசென் 743 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரு 9 மற்றும் 10ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பட்டியளில் டாப் 10 இடங்களில் டேவிட் வார்னர், குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement