
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை நாக்பூரில் தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாக்பூர் ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் அமைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே எல் ராகுல், “நாங்கள் பயிற்சி முகாமில் பல்வேறு சூழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினோம். எங்களுடைய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இந்தத் தொடரில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்று எங்களுக்கு தெரியும். இன்னும் எங்கள் அணியில் பிளேயிங் லெவன் குறித்து நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பல கடினமான முடிவுகள் குறித்து எடுக்கப்படலாம் என்பது மட்டும் உறுதி. நாங்கள் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட ஆசைப்படுகிறோம்.