
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுவதால் இஷான் கிஷன் நீக்கப்பட்டார். மேலும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித் சர்மா(13), சூர்யகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல் (9) ஆகியோரும் மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் வீழ்ந்தனர். இதில் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார்.