IND vs AUS, 3rd Test: சகட்டு மேனிக்கு திரும்பும் பந்து; வரிசையாக நடையைக் கட்டிய பேட்டர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியை அடித்து துவம்சம் செய்து இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் பின்னிய சூழல் வலையில் சிக்கி செய்வதற்று ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர்.
Trending
எனவே இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்யவும், முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலிய அணியும் மும்முரமாக ஈடுபடும் என்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்த டெஸ்ட் போட்டி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேறது போல் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல்-க்கு பதிலாக ஷுப்மன் கில் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மது ஷமி-க்கு பதிலாக உமேஷ் யாதவும் களமிறங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியிலும் மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீச, அந்த ஓவரிலேயே ரோஹித் சர்மாவ இரண்டு முறை நடுவரின் தவறான முடிவால் தப்பிப்பிழைத்தார். ஆனால் அவரது அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.
ஆட்டத்தில் 6ஆவது ஓவரை வீச வந்த குன்னமேன் கேப்டன் ரோஹ்த் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைத் தொடந்து வந்த நாதன் லையன், சட்டேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்த, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி குன்னமேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி 45 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது. தற்போது விராட் கோலி மற்றும் கேஎஸ் பரத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றன. அதேசமயம் பந்து சகட்டுமேனிக்கு திரும்புவதால் இந்த டெஸ்ட் போட்டியும் மூன்றே நாளில் முடியும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now