இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்துள்ளது. இதே நம்பிக்கையுடன் அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு தயாராகி வருகின்றனர். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் பிப்ரவரி 9ஆம் நாக்பூர் மைதானத்தில் தொடங்கி மார்ச் 13ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
நியூசிலாந்து தொடருக்கு பின்னர் பணிச்சுமை காரணமாக ஓய்வில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு கம்பேக் தந்துள்ளனர். மேலும் காயம் காரணமாக இடம்பிடிக்காமல் இருந்த வந்த ரவீந்திர ஜடேஜாவும் தனது உடற்தகுதியை நிரூபித்து அணியில் இடம்பிடித்தார்.
ஆனால் நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள ஜஸ்பிரித் பும்ராவின் நிலைமை தான் என்ன ஆனது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்தனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தின் போது முதுகில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்டார். கடந்த இலங்கை தொடரில் கம்பேக் தருகிறார் என அறிவிக்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் முதுகுவலி பிரச்சினை எனக்கூறி வெளியேறினார்.