Advertisement

பும்ரா இல்லாமல் விளையாட பழகிவிட்டோம் - ரோஹித் சர்மா!

பும்ரா இல்லாமல் எட்டு மாதங்களுக்கு மேலாக பழகிவிட்டேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Advertisement
IND vs WI: Yashasvi Jaiswal To Make Debut; Play As An Opener In First Test, Confirms Rohit Sharma!
IND vs WI: Yashasvi Jaiswal To Make Debut; Play As An Opener In First Test, Confirms Rohit Sharma! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 12, 2023 • 11:31 AM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் இந்திய அணி முதல் கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கான முழு பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை டெஸ்ட் அணியில் சில இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 12, 2023 • 11:31 AM

மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் தொடர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்கிற செய்தியையும் பிசிசிஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் பேட்டியளித்த ரோஹித் சர்மா, “ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இருக்கிறார். அவர் கட்டாயம் விளையாடுகிறார்.’ என்கிற தகவலை பகிர்ந்து கொண்டார். பின்னர் சுப்மன் கில் ஓபனிங் இறங்குவதற்கு பதிலாக மூன்றாவது இடத்தில் இறக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறார் என பகிர்ந்து கொண்டார்.

Trending

‘இதை டிராவிட்டிடம் கூறினார். டிராவிட் என்னிடம் கூறினார். இதைப் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. அதற்கான திட்டங்களை வகுத்து என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று யோசித்து வருகிறேன். கடந்த எட்டு மாதங்களாக பும்ரா இல்லை. இதற்காக நான் பழகிக் கொண்டேன். மற்ற பவுலர்களை வைத்து என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவு எடுத்து செயல்படுகிறோம். இந்தியா போன்ற நாட்டில் வீரர்கள் நிறைய வீரர்கள் இருந்தாலும், நிறைய வீரர்கள் காயம் அடைந்து விடுகின்றனர்.

காயம் என்பது பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பற்றாக்குறை இன்னும் இருக்கிறது. அணியில் இருக்கும் குறிப்பிட்ட சில வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து அனுபவத்தின் மூலம் மாற்றிமாற்றி பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய எண்ணம் மட்டுமல்ல, பலரின் எண்ணமும் பும்ரா விரைவாக அணிக்குள் வரவேண்டும் என்றுதான் இருக்கிறது. 

இருப்பினும் அவர் உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டு முழுமையாக அணிக்கு திரும்பும் வரை பல இளம் வீரர்களை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்கிற திட்டத்திலும் இருக்கிறோம். அவர் அணிக்குள் வந்தால் உடனடியாக எடுப்போமா என்று சொல்ல இயலாது. பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்து பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement