
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநால் தொடரில் விளையாடி வருகின்றன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திராலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்ன் 52 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ருதுராஜ் 71 ரன்களிலும், ஷுப்மன் கில் 74 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழது ஏமாற்றமளித்தனர்.