
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அத்தியது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் புயல் காரணமாக வெஸ்ட் இண்டீஸிலேயே தஞ்சமடைந்தனர். அதன்படி இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆதரவு ஊழியர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என முழு குழுவும் பார்படாஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். மழை உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக இந்திய அணியினர் தங்கியுள்ள விடுதிகளில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி புயல் விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய அணிடால் திட்டமிட்டபடி நாடு திரும்ப முடியவில்லை. அந்தவகையில் தற்போது இந்திய அணி வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் தனி விமானம் மூலம் இந்தியவிற்கு அழைத்து வர பிசிசிஐ திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அவர்கள் நாடு திரும்புவார்கள் என கூறப்பட்ட நிலையில், அதிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.