
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிகெட் தொடர் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இறுதிக்கட்ட இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஷுப்மான் கில் ஆகியோர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலியும் தனது இடத்தை உறுதிசெய்வார்.