
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை சமன் செய்து, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதில் கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் அபாரமான முறையில் வென்றது. இதன் மூலம் தொடரையும் சமன் செய்தது.
இதற்கு அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி உள்நாட்டில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் ஃபிரான்சிசைஸ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் எல்லா அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்த நிகழ்வுகள் குறித்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ், “கிரிக்கெட்டில் இளமைக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் போட்டியில் எப்படி செல்ல விரும்புகிறீர்கள் மற்றும் உங்களுடைய போட்டிக்கான திட்டங்கள் என்ன என்பதை பொறுத்து, அங்கு அனுபவத்திற்கு ஒரு பெரிய பங்கு நிச்சயம் உண்டு. விராட் கோலி இந்திய டி20 அணிக்கு திரும்ப இருப்பதால் இந்த நன்மை கிடைக்கும்.