
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 12ஆம் தேதி லீட்ஸீல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஒரே அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்தத் தொடரில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
முன்னதாக தென் ஆப்பிரிக அணியின் ஆலன் டொனால்ட் 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 330 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 28ஆம் இடத்தில் உள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 323 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் 29ஆவது இடத்தில் உள்ளார். இதனல் இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்த சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.