
Yashasvi Jaiswal Records: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மன்னில் தன்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே சதத்தை விளாசி மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த சதத்தின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இன்னிங்கிலாந்து மன்னில் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்த ஏழாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக சௌரவ் கங்குலி, முரளி விஜய், அப்பாஸ் அலி பெய்க் போன்ற ஜாம்பவான்கள் இங்கிலாந்தின் மன்னில் தங்களுடைய முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.