
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் மீது ரசிகர்களில் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகளவில் இருந்து வந்துள்ளது. அந்தவகையில் இம்முறை இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளைடாடவுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து அணி கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாகவே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லமுடியாமல் தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற தொடரை கூட இங்கிலாந்து அணியானது 2-2 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியதே தவிர, தொடரை வெல்ல முடியவில்லை. இதனால் இம்முறை அந்த தடையை உடைத்து தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் எதிர்வரும் ஆஷஸ் தொடருக்கான இடம் மற்றும் தேதி குறித்த அறிவிப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அந்தவகையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயன ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கும் என்றும், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு போட்டியாக பிரிஸ்பேனில் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.