Advertisement

ஒரு கேப்டன் பிட்டாக இல்லை என்றால் அது அவமானம் - கபில்தேவ்!

ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Advertisement
Kapil Dev launches scathing attack on 'overweight' Indian captain Rohit Sharma
Kapil Dev launches scathing attack on 'overweight' Indian captain Rohit Sharma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 23, 2023 • 08:49 PM

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையோடு விராட் கோலி இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதற்கு அடுத்து இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்க முடியாது என்று கூறி இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் இருந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியையும் பறித்தது!

Bharathi Kannan
By Bharathi Kannan
February 23, 2023 • 08:49 PM

இதன் பின்னால் ரோஹித் சர்மா வெள்ளைப்பந்து இந்திய அணிக்கான கேப்டனாக பொறுப்பேற்க புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வந்தார். மேலும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்க விராட் கோலி இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியையும் துறந்தார். அடுத்து ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்கான மூன்று வடிவத்திலும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில் இந்திய அணி உள்நாட்டில் மிகப்பெரிய வெற்றிகளை தொடர்ந்து குவித்து வருகிறது.

Trending

அதே சமயத்தில் உடல் தகுதி பெரிய அளவில் இல்லாததால் அடிக்கடி காயத்தில் சிக்கும் ரோஹித் சர்மா அணிக்கு வெளியே இருக்க வேண்டிய நிலைமையும் வருகிறது. இதுகுறித்து தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பையில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிகழ்வில் ரோஹித் சர்மாவின் உடல் தகுதி பற்றி கபில் தேவ இடம் கேட்ட பொழுது அதற்கு அவர் “பிட்டாக இருப்பது மிகவும் அவசியம். மேலும் ஒரு கேப்டன் பிட்டாக இல்லை என்றால் அது அவமானம். ரோஹித் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்” என்று மிகவும் கடுமையாக கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர் “அவர் சிறந்த பேட்டர். ஆனால் அவர் உடல் தகுதி குறித்து பேசும்பொழுது அவர் கொஞ்சம் அதிக எடையுடன் இருக்கிறார். குறைந்தபட்சம் டிவியில் பார்க்கும் பொழுது அப்படித்தான் இருக்கிறார். எது எப்படி என்றாலும் அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் வீரர் ஆனால் அவர் தன் உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விராட் கோலியை பாருங்கள் அவரைப் பார்த்தாலே அவர் பிட்டாக இருப்பது தெரியும்” என்று கூறியுள்ளார்.

சமீப காலங்களில் கபில்தேவ் அவர்கள் ஏதாவது கருத்து சொல்லும் பொழுது கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அல்லது கடுமையான முறையில் சொல்வது வழக்கமாகி வருகிறது. விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் வீரர்களின் பணிச்சுமை குறித்தும் முன்பு கொஞ்சம் கபில்தேவ் கடுமையாகவே பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement