ஐந்தாவது டெஸ்ட்: கேஎல் ராகுல் விலகல்; வாஷிங்டன் சுந்தர் விடுவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் அறிவிப்பில் காயம் காரணமாக கேஎல் ராகுல் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளதாகவும், மேலும் அவரது காயம் குறித்து பிசிசிஐ மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருவதாவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Jasprit Bumrah
— CRICKETNMORE (@cricketnmore) February 29, 2024
KL Rahul#INDvENG #India #Cricket #JaspritBumrah #KLRahul pic.twitter.com/mqhH9rmRkG
அதேசமயம் பணிச்சுமை காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார். அதேசமயம் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்த அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விடுவிக்கப்படுவதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
Win Big, Make Your Cricket Tales Now