Advertisement

ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது நல்லதல்ல - மனோஜ் திவாரி விமர்சனம்!

கேப்டன் கில் நடந்து கொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் அவர் விராட் கோலியைப் பின்பற்ற முயற்சித்தார் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

Advertisement
ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது நல்லதல்ல - மனோஜ் திவாரி விமர்சனம்!
ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது நல்லதல்ல - மனோஜ் திவாரி விமர்சனம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 22, 2025 • 12:58 PM

Lords Test: மூன்றாவது டெஸ்டில் ஷுப்மான் கில்லின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மிகவும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், கடுமையாக விமர்சித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 22, 2025 • 12:58 PM

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் ஷுப்மான் கில் மிகவும் ஆக்ரோஷமாக கணப்பட்டார். மேலும் அவர் அடிக்கடி எதிரணி வீரர்களுடன் வாக்கு வாதத்தி ஈடுபட்டிருந்தார். இதைப் பார்த்த சில ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும், அந்த போட்டியில் ஷுப்மான் விராட் கோலியைப் பின்பற்ற முயன்றதாக கூறினர். இருப்பினும் அது எந்தவகையிலும் இந்திய அணிக்கு உதவவில்லை.

மறாக அப்போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடியா நிலையிலும் 22 ரன்களில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியதுடன் 1-2 என்ற கணக்கில் தொடரிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் தற்சமயம் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷுப்மன் கில்லின் செயல்பாடுகளை முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "கேப்டன் கில் நடந்து கொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் அவர் விராட் கோலியைப் பின்பற்ற முயற்சித்தார் என்று நினைக்கிறேன். இதன் விளைவாக, அது அவரது பேட்டிங்கிற்கு உதவவில்லை. ஐபிஎல்லில் அவர் கேப்டனாக ஆனதிலிருந்து, அவர் ஆக்ரோஷமான மனநிலையை ஏற்றுக்கொண்டு நடுவர்களிடம் நிறையப் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இது ஷுப்மன் கில்லின் வழக்கமான செயல்பாடுகள் அல்ல. அவர் அந்த வகையான ஆக்ரோஷத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை, எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கேப்டன் முன்னணியில் இருந்து வழிநடத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இவ்வளவு ஆக்ரோஷம் தேவையில்லை. அது உங்கள் சக்தியை உறிஞ்சிவிடும். மேலும் வீரர்கள் ஆக்ரோஷமான பாணியை கடைப்பிடிக்க முடியும், அதற்காக எப்போதும் வாய்மொழியாக பதிலளிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

Also Read: LIVE Cricket Score

டெஸ்ட் போட்டியில் வென்ற பிறகும் அவர்கள் தங்களுடைய ஆக்ரோஷத்தைக் காட்டலாம். இந்தியா இந்த டெஸ்ட் தொடரை 2-1 என எளிதாக வழிநடத்தியிருக்கலாம். இந்த வகையான ஆக்ரோஷம் விளையாட்டுக்கு நல்லதல்ல, குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இது ஒரு போக்காக மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement