
Men's ODI Player Rankings: Shubman Rises To Fourth, South Africa's Markram Makes Big Gains (Image Source: Google)
நெதர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
இதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ரஸ்ஸி வெண்டர் டுசென் 777 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் 740 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் நீடிக்கின்றனர்.
இவரகளைத் தொடர்ந்து 738 புள்ளிகளுடன் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 6ஆம் இடத்திற்கும், ரோஹித் சர்மா 8ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.