Advertisement

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கணித்த முகமது கைஃப்; ஃபினிஷருக்கு இடமில்லை!

வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை முன்னாள் வீரர் முகமது கைஃப் கணித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 14, 2024 • 15:38 PM
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கணித்த முகமது கைஃப்!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கணித்த முகமது கைஃப்! (Image Source: Google)
Advertisement

இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மே ஒன்றாம் தேதி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீவரத்தை ஐசிசியிடம் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் சமர்பிக்க வேண்டும். அதேசமயம் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Trending


அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இதில் அவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் உடற்தகுதி போன்றவற்றை தேர்வாளர்கள் கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்யவுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளனர். 

இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நடப்பு டி20 உலக்கோப்பை தொடரிருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் முகமது கைஃப் கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ரியான் பராக் ஆகியோரை பேட்டர்களாக தேர்வு செய்துளார். 

 

அணியின் ஆல் ரவுண்டர்கள் வரிசையில், ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும், பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். இருப்பினும் இவர் தேர்வு செய்துள்ள அணியின் சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில், ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முகமது கைஃப் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement