பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித்; வாஷிக்கு வழிவிடும் நிதீஷ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே (நான்காவது) டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு இப்போட்டில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
Trending
அதிலும் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வென்றால் மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற அழுத்ததிற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டிக்காக இரு நி வீரர்களும் திவீரமாக தயாராகியும் வருகின்றன்ர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாம் கொன்ஸ்டாஸ் அறிமுகமாகிறார்.
அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி தொடக்க வீரர் இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கிய நிலையில், ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கினார்.
Rohit Sharma to return as opener!#AUSvIND #Australia #TeamIndia #KLRahul #RohitSharma pic.twitter.com/H3fGGEY73E
— CRICKETNMORE (@cricketnmore) December 25, 2024ஆனால் இத்தொடரில் அவர் பெரிதளவில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் தொடக்க வீரர் இடத்தில் களமிறங்கிய கேஎல் ராகுல் மூன்றாம் வரிசையிலும், ஷுப்மன் கில் மிடில் ஆர்டரிலும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Nitish Kumar Reddy is likely to make way for Washington Sundar in India's XI!#AUSvIND #Australia #TeamIndia #Cricket pic.twitter.com/u0mz1ZbEsA
— CRICKETNMORE (@cricketnmore) December 25, 2024இதுதவிர்த்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்திய அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now