
தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 13) செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது முதல் போட்டியில் பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியையும் வெல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் மறுபக்கம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கு முயற்சியில் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியை எதிகொள்ளவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.