
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் பாகிஸ்தான் அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடரான டிசம்பர் 10ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும் நடைபெறவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கானுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அப்பாஸ் அஃப்ரிடி டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.