1-mdl.jpg)
பாகிஸ்தான் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அந்த அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதி செஞ்சூரியனில் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட்டாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் சிறப்பு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி பகிஸ்தான் அணிக்காக இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் 91 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் ஆசாம் 9 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் என 43.9 என்ற சராசரியில் 3997 ரன்களைச் சேர்த்துள்ளார்.