
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இந்தூரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷுப்மன் கில் 104 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 72 ரன்களையும், கே.எல் ராகுல் 52 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்ட பின் 33 ஓவர்களில் 317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வேளையில் 28.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல், “இன்று காலை நான் இந்த மைதானத்தை பார்க்கும் போது அதிகமாக ஸ்பின் ஆகும் என்று நினைக்கவில்லை. நான் இந்த போட்டியில் அதிக ரன்களை நாங்கள் குவிக்கும்போதே எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. அதனால் எங்களுடைய வேலை இன்று மிகவும் தெளிவாக இருந்தது.