
India A Squad for Australia A: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணியின் கேப்டன்களாக ரஜத் படிதர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அணியின் கேப்டானாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணைக்கேப்டனாக துருவ் ஜூரெலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு ஜெகதீசன், சாய் சுதர்ஷ்சன் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ராஜத் படித்தாரும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளுக்கான கேப்டனாக திலக் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் இந்திய ஏ அணிக்காக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள்னர்.