
Manchester Test: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ஷுப்மன் கில் சில தவறுகளைச் செய்துள்ளதாக முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான மண்ணில் அதிக டெஸ்ட் கேட்சுகளை பிடித்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை கேஎல் ராகுல் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபாரமான சதத்தின் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 544 ரன்களைக் குவித்துள்ளது.
இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 76 ரன்களுடனும், லிடாம் டௌசன் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 186 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஷுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.