
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவ்து டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடைபெறறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சைம் அயூப்பில் அதிரடியான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சைம் அயூப் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 98 ரன்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து பாபர் அசாம் 31 ரன்களையும், இர்ஃபான் கான் 30 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அறிமுக வீரர் தயான் கலீம் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய மேத்யூ பிரிட்ஸ்கீ 12 ரன்னிலும் விக்கெட்டை இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். பின் 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் 117 ரன்களை எடுத்த நிலையில் ஹென்றிக்ஸ் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த வான்டெர் டுசன் 66 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.