இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்கள் தேர்வில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லையும், துணைக்கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு வங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்வு செய்யும் வேலைகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இத்தொடருக்கு முன்னர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. மேலும் கேப்டனுக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல், ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் அல்லது துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அனைத்து போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வீரருக்கு கேப்டன் பதவியை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பும்ரா டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டிந்தார். மேற்கொண்டு ரோஹித் சர்மா பங்கேற்காத போட்டிகளுக்கு பும்ரா கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் அத்தொடாரின் கடைசி போட்டியின் போது கேப்டனாக செயல்பட்டு வாந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தை சந்தித்ததுடன் போட்டியில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினார்.
Team India's Likely Leaders In Test Cricket!#ShubmanGill #Test #IndianCricket #TeamIndia #RishabhPant pic.twitter.com/1skwsngqMI
— CRICKETNMORE (@cricketnmore) May 11, 2025இந்நிலையில் தான் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கேப்டன்சிக்கான தேர்வில் இருந்து அவரை விலக்குவது என்ற முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லையும், டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பதவியை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்திற்கு பிசிசிஐ வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Also Read: LIVE Cricket Score
ஷுப்மன் கில் குறித்து பேசினால் இந்திய அணிக்காக 32 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதேசமய ரிஷப் பந்தைப் பொறுத்தவரையில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர், அதில் அவர் 42.11 சராசரியாக 2948 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now