ரோஹித், விராட் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது - முகமது ஷமி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Trending
மேலும் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலியும், அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அறிவித்தனர். இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த செய்தியானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு முடியை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 159 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 5 சதங்கள், 32 அரைசதங்கள் என 4231 ரன்களையும், விராட் கோலி 125 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 38 அரைசதம், ஒரு சதம் என 4,188 ரன்களையும் சேர்த்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர். இதனையடுத்து இரு வீரர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஷமி, “சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் 15-16 ஆண்டுகளாக நாட்டிற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இந்த ஃபார்மெட்டின் ராஜாக்கள் என்ற பட்டத்தையும் தங்கள் வசம் வைத்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவது அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் இது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதியாகும்.
ஏனெனில் ஒரு வீரர் வெளியேறும்போது தான், மற்றொருவருக்கு உள்ளே நுழைய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இத்தகைய நட்சத்திர வீரர்களின் இடத்தை பூர்த்தி செய்வது என்பது பெரும் சவாலாக இருக்கும். அதேசமயம் அவர்கள் தங்களது இலக்கை அடைந்த பிறகு ஒரு பயணத்திற்கு விடைபெறுவது உண்மையான உணர்ச்சிகரமான தருணம். அணிக்காக போட்டிகளை வெல்வதற்கும், இந்தியாவுக்காக அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடுவதற்கும், வழியில் சாதனைகளை முறியடித்ததற்கும் ரோஹித் மற்றும் விராட் இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இது மிகப்பெரிய சாதனை. போட்டியில் தோல்வியடையாமல் இருக்க கடுமையாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு சிறிய அடியும் ஒவ்வொரு பிரார்த்தனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், எந்தத் திறனிலும் அணியின் வெற்றிக்கு பங்களித்த வீரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now