
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற நிலையிலும், மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களைச் சேர்க்க தவறியது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இப்போட்டியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த அவர் பெரிய ஸ்கோரை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 சிக்ஸர்களுடன் 26 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் அவர் பெரிதளவில் ரன்களை அடிக்கவில்லை என்றாலும் சிறப்பு சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.