ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ரோஹித் சர்மா!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
-mdl.jpg)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது. மேற்கொண்டு புள்ளிப்பட்டியளின் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மா 79 ரன்கள் எடுத்தால், ஐபிஎல்லில் 7000 ரன்களை நிறைவு செய்வார். இதனை செய்யும் பட்சத்தில் ஐபிஎல் தொட்ரில் 7ஆயிரம் ரன்களைக் கடக்கும் இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 267 போட்டிகளில் 262 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 6921 ரன்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களையும், 46 அரைசதங்களையும் அடித்துள்ளார். இதுவரை ஐபிஎல்லில் விராட் கோலி மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார், அவர் 8 சதங்கள் 62 ஆரைசதங்களுடன் 8509 ரன்களைச் சேர்த்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு ரோஹித் சர்மா இந்த போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தால், ஐபிஎல்லில் 300 சிக்ஸர்களை அடிக்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை ரோஹித் சர்மா 267 போட்டிகளில் 262 இன்னிங்ஸ்களில் விளையாடி 297 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக கிறிஸ் கெயில் உள்ளார். அவர் இதுவரை 142 போட்டிகளில் 357 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
Also Read: LIVE Cricket Score
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேத்தியா, ஷாருக் கான், ரஷித் கான், சாய் கிஷோர், ஜெரால்டு கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
Win Big, Make Your Cricket Tales Now